• Breaking News

    பிக்பாஸ் சீசன் 9..... அக்டோபர் 5-ம் தேதி முதல் ஆரம்பம்

     


    விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9-ன் தொடக்க தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

    தமிழ் தாண்டி பல்வேறு மொழிகளிலும் 'பிக்பாஸ்' என்ற 'ரியாலிட்டி ஷோ' நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக 'பிக்பாஸ்' தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

    7-வது சீசனுடன் கமல்ஹாசன் விலகியநிலையில், 8-வது சீசனை முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இப்போது 9-வது சீசன் துவங்க இருக்கிறது.

    தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 9 துவங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 5-ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளதாம்.

    அக்டோபர் 3-ம் தேதி, விஜய் சேதுபதி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று, வீடு எப்படி இருக்கிறது என்று காண்பிக்கவிருக்கிறார். அதைத் தொடர்ந்து, 4-ம் தேதி முதல் எபிசோடு ஷூட்டிங் நடைபெறுகிறது, 5-ம் தேதி முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    No comments