பெரம்பலூரில் பிரசாரம் ரத்து...... தவெக தலைவர் விஜய்க்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்
தவெக தலைவர் நடிகர் விஜய், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு செப்டம்பர் 13 ஆம் தேதி தனது அரசியல் சுற்றுப் பயணத்தை திருச்சியில் தொடங்கினார்.
வாரம் தோறும் சனிக்கிழமைகளில் பரப்புரை செய்யும் திட்டத்தின் கீழ், அவர் முதல் நாளில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் மக்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார். இதில், திருச்சி மற்றும் அரியலூர் பகுதிகளில் பரப்புரை நடைபெற்றது. ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது.
இந்த சூழலில், பெரம்பலூர் நகரில் “Bro… Politics Saturday Party ila, அது 24*7 duty” என்ற விமர்சனமான வார்த்தைகளுடன் விஜய்க்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பொதுமக்கள் மத்தியில் இது வகையான போஸ்டர் யாரால் ஒட்டப்பட்டது என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
விஜய் அரசியலில் தொடர்வது, ஒரு முழுநேர பொறுப்பா அல்லது வாராந்திர நடவடிக்கையா என்ற விமர்சனத்தையே இந்த போஸ்டர் நேரடியாக எட்டிப்பிடிக்கிறது. இதனால், விஜயின் எதிர்க்கட்சி தரப்பினர் திட்டமிட்டு இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.
No comments