• Breaking News

    நாகையில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க 5-வது மாநாடு நடைபெற்றது

     


    தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க நாகப்பட்டினம்  மாவட்ட ஐந்தாவது மாநாடு, வேதாரண்யம், செம்போடையில் உள்ள ருக்மனி வரதராஜன் திருமண மஹாலில், மாவட்டத் தலைவர் ஆ.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. வேதாரண்யம் வட்டத் தலைவர் நா.உலகநாதன் வரவேற்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் துவக்கவுரையாற்றினார்.

     மாவட்டச் செயலாளர் பொறுப்பு இரா.நடராஜன் வேலை அறிக்கையையும், பொருளாளர் எம்.பி.குணசேகரன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். உறுப்பினர்கள் விவாதங்களுக்கு பின்னர் அறிக்கைகள் ஏகமனதாக ஏற்கப்பட்டன. மாவட்ட துணைத் தலைவர்கள் எம்.இராஜமாணிக்கம், எஸ்.ஜமால், ஏ.சையது பாரூக், எஸ்.கே.கலைச்செழியன், மாவட்ட இணைச் செயலாளர்கள் எம்.தமிழ்வாணன், கே.குப்புசாமி, பி.பன்னீர்செல்வம், எஸ்.வேதரெத்தினம், வட்ட நிர்வாகிகள் எஸ்.தட்சிணாமூர்த்தி வேதை, கா.இராஜூ நாகை என்.பக்கிரிசாமி திருக்குவளை,  ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். மாநில பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். 

    பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் மாவட்டத் தலைவராக எஸ்.வேலாயுதம், துணைத் தலைவர்களாக எம்.இராஜமாணிக்கம், எம்.காதர்மொய்தீன், அ.சையதுபாரூக், எஸ்.ஆர்.கலைச்செழியன், ஆர்.நடராஜன், மாவட்டச் செயலாளராக எம்.பி.குணசேகரன், இணைச் செயலாளர்களாக எஸ்.வேதரெத்தினம், கே.குப்புசாமி, எஸ்.கோவிந்தசாமி, எஸ்.ஜமால், ஆர்.இளங்கோவன், மாவட்டப் பொருளாளராக எஸ்.வாசு, மாநில செயற்குழு உறுப்பினராக என்.உலகநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் த.ஸ்ரீதர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் அ.தி.அன்பழகன், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் வி.எஸ்.இராமமூர்த்தி, ஓய்வூதியர் சங்க தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் த.சுத்தானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தேர்தல்கால வாக்குறுதிப்படி அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், ஓன்றிய அரசுக்கிணையான மருத்துவப்படி வழங்க வேண்டும், எழுபது வயதான ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், கம்யூடேசன் பிடித்தம் செய்வதை 15 ஆண்டுகளிலிருந்து  10 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், காரைக்கால், பேரளம், மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு தொடர் வண்டி சேவை இயக்கப்பட வேண்டும். சென்னைக்கு நாகையிலிருந்து பகல்நேர இரயில் சேவை இயக்க வேண்டும், கொரோனா காலத்தில் இரத்து செய்யப்பட்ட முதியோருக்கான இரயில் பயண சலுகை கட்டணம் மீண்டும் அமல்படுத்த வைண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை இயற்றப்பட்டன.

    மாநிலச் செயலாளர் குரு.சந்திரசேகரன் நிறைவுரையாற்றினார். வேதாரண்யம் வட்டப் பொருளாளர் எஸ்.விஜயகுமார் நன்றியுரையாற்றினார்.

    No comments