தென்காசி: குணராமநல்லூர் ஊராட்சியில் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிய பாலம் திறப்பு


குணராமநல்லூர் ஊராட்சியில் ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பாலத்தினை யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை திறந்து வைத்தார்.

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், குணராமநல்லூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் செங்குளம் மறுகால் கால்வாயில் பாலம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. யூனியன் துணை சேர்மன் முத்துகுமார் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சுபா சக்தி முன்னிலை வகித்தார். யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை பங்கேற்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், தர்மர், பாலசுப்பிரமணியன், தம்பி கந்தசாமி, அன்பு (எ) தமிழ்செல்வன், மாரிமுத்து, ஊராட்சி பணியாளர் முத்துகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments