நாகை: காது கேளா,வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

 


 நாகை:வாய் பேச இயலாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிக்கு பட்டா வழங்க வேண்டும் என்று ஆட்சியரிடம்  மனு அளிக்கப்பட்டுள்ளது. 

நாகை மாவட்டம் வேதாரண்யம் வானவன் மாதேவி அருகே உள்ள வெள்ள பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் ஆர் பிரசாந்த் காது கேளாத வாய் பேச இயலாத மற்றும் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான ரவிச்சந்திரன் தனது பெற்றோருடன் ஆட்சியர் ஆகாஷ்-யிடம் அளித்த மனு:  மாற்றுத்திறனாளியாகிய நான் எனது பெற்றோருடன் வெள்ளைப் பள்ளம் கிராமத்தில் குடிசை கட்டி கடந்த 5 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறேன். இதற்குரிய வீட்டு வரியும் முறையாக செலுத்துகிறேன். 

மேலும் நான் வசித்து வரும் வீட்டிற்கு பட்டா கோரி பலமுறை மனுவும் அளித்துள்ளேன். இந்நிலையில்  வெள்ளைப் பள்ளம் பகுதி வருவாய் வட்ட ஆய்வாளர் நான் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி இருப்பதாகவும்,  வீட்டை உடனடியாக அகற்றாவிட்டால்,  வீட்டை இடித்து விடுவதாகவும் நிர்பந்தித்து வருகிறார். இதனால் மாற்று இடம் ஏதும் இன்றி நானும் எனது குடும்பத்தினரும் தவித்து  வருகிறோம். எனவே மாற்றுத்திறனாளி ஆகிய எனக்கு,  நான் வசித்து வீட்டிற்கு பட்டா வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே.பாஸ்கர் தலைமையில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக துறைசார்ந்த அலுவலர்களிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

திருக்குவளை நிருபர் த.கண்ணன்


Post a Comment

0 Comments