மற்றுமொரு உள்கட்சி கலகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டது போல, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (செப். 8) வெளியிட்ட அறிவிப்பில், மல்லை சத்யாவை கட்சியில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே, மல்லை சத்யா கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கட்சி உறுப்பினராக இருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இது, மதிமுக அரசியல் வளர்ச்சியில் முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.கட்சியின் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை மீறி, நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவே இந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைகோ தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், இனிமேல் எந்தவிதமான சம்பந்தமும் மல்லை சத்யாவுடன் மதிமுகக்கு இருக்காது என்றும், கட்சியின் ஒற்றுமைக்கும், ஒழுங்குக்கும் இந்த முடிவு உதவியாக இருக்கும் என்றும் வைகோ கூறியுள்ளார். இந்த அறிவிப்பு, மதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


0 Comments