தென்காசி: பெரியகுளத்தில் தீயணைப்பு படை வீரர்களின் ஒத்திகை பயிற்சியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்


தென்காசி அருகே கீழப்புலியூர் பெரியகுளத்தில் தீயணைப்பு படை வீரர்களின் ஒத்திகை பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் பார்வையிட்டார்.

தென்காசி அருகே கீழப்புலியூரில் உள்ள பெரியகுளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து சிறப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தலைமை வகித்து, தொடங்கி வைத்து பார்வையிட்டார். தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலர் மணிகண்டன், உதவி மாவட்ட அலுவ லர்கள் சுரேஷ் ஆனந்த், பிரதீப்குமார் மற்றும் நிலைய அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.

பேரிடர் காலங்களில் எப்படி செயல்படுவது, ஆற்றில் சிக்கியவர்களையும், தண்ணீரில் மிதக்கும் பொருட்களையும் மீட்பது குறித்தும், ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் அந்த கரையிலிருந்து இந்த கரைக்கு படகில் சென்று மீட்பது, திடீர் வெள்ளப் பெருக்கால் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை அளிப்பது குறித்தும் தீயணைப்பு படை வீரர்கள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

இதில் தென்காசி செந்திலாண்டவர் கல்லூரி, கீழப்புலியூர் இந்து மேல்நிலைப்பள்ளி என் சிசி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments