முக்கூடலில் விபத்தினை தடுக்க வேகத்தடை, பேரிகார்டுகள் அமைத்திட வேண்டும்...... பேரூராட்சி கவுன்சிலர் சிந்துஜா கோரிக்கை......


முக்கூடலில் விபத்தினை தடுக்க வேகத்தடை, பேரிகார்டுகள் அமைத்திட வேண்டும் என பேரூராட்சி கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து முக்கூடல் பேரூராட்சி 14வது வார்டு கவுன்சிலர் சிந்துஜா முத்துசாமி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருநெல்வேலி-பொட்டல்புதூர் சாலையில் முக்கூடல் முத்துமாலையம்மன் கோவில் ஆர்ச் முன்பும், முக்கூடல் பேரூந்து நிலையம் பகுதியில் வேகத்தடை இல்லாமல் உள்ளது. இச்சாலையில் பிரசித்தி பெற்ற முத்துமாலையம்மன் கோவில், காவல்நிலையம், பேருந்து நிலையம், வாரச்சந்தை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பள்ளிகள் அமைந்துள்ளது. இதனால் அதி வேகமாக இயக்கப்படும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது, இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே அப்பகுதிகளில் வேகத்தடை  மற்றும் பேரிகார்டுகள் அமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments