தோரணமலை முருகன் கோவிலில் காவலர் தேர்வுக்கான மாதிரி தேர்வு..... நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் எழுதினர்.....


தோரணமலை முருகன் கோவிலில் நடைபெற்ற காவலர் தேர்வுக்கான மாதிரி தேர்வினை நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் எழுதினர்.

தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீமுருகன் கோவிலில் ஆன்மீக பணிகளுடன், கல்விப்பணி மற்றும் பல்வேறு சமுதாய நலப்பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு மாணவர்கள்  அறிவு வளர்ச்சி பெற வேண்டி மலை அடிவாரத்தில் கே.ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு  நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் கிராமப்புற மாணவ, மாணவிகள் கல்வி மற்றும் வேலை வாய்பில் உயர்வு பெறுவதற்கான பல்வேறு பயிற்சி வகுப்புகள், பல்வேறு கிராமப் பாராம்பரிய விளையாட்டு கலைகளும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக தோரணமலை கோவில் நிர்வாகம் மற்றும் தென்காசி ஆகாஷ் அகடாமி இணைந்து காவலர் தினத்தை கொண்டாடும் வகையில், வருகிற நவம்பர் 9ந்தேதி நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் மற்றும் சிறைச்சாலை காவலர் தேர்வுக்கான இலவச முழு மாதிரி தேர்வு தோரணமலை கோவிலில் நேற்று நடைபெற்றது. இதில் காவலர் தேர்வுக்கு படித்து வரும் கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று தேர்வினை எழுதினர்.

மாணவ, மாணவிகளுக்கான மாதிரி தேர்வு வினாத்தாளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் வழங்கி தேர்வை தொடங்கி வைத்தார். அப்போது கிராமப்புற பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் மேம்பட ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பேராசிரியர்கள் அனைவரும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த தன்னார்வத்தோடு முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Post a Comment

0 Comments