ஏளாவூர் காலனியில் பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன்


G.1388.பெரிய ஓபுளாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஏளாவூர் காலனி பகுதி மக்கள் பல ஆண்டுகளாக ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஏளாவூர் பகுதிக்குச் சென்று நியாய விலைக் கடைக்கு  பொருட்களை வாங்கி வந்தனர் மக்கள் கோரிக்கையை ஏற்று ஏளாவூர் காலனி பகுதிக்கு பகுதி நேர நியாய விலைக் கடையை  திறந்து வைத்து பொருட்களை வழங்கினார்  கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜ்.

 உடன் கூட்டுறவு துணை பதிவாளர் சரவணன் வட்ட வழங்கல் அதிகாரி கந்தசாமி. செயல் ஆட்சியர் வேல்முருகன் கூட்டுறவு சார் பதிவாளர் மாரியம்மாள் செயலாளர் திருமலை நியாய விலை கடை விற்பனையாளர் உத்தரகுமார் மற்றும் ஒன்றிய செயலாளர் மணிபாலன் மாவட்ட பொருளாளர் ரமேஷ் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் கழக நிர்வாகிகள் கேசவன் ஜெயச்சந்திரன் ரவி பரத் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் கிளைக் கழக நிர்வாகிகள்  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments