தாமரைக்குளம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது

 


 தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி வளாகத்தில், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில், மருத்துவர்கள் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணி புரியும் மருத்துவ பணியாளர்கள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து, மருந்து மாத்திரைகள் அளித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் இந்த முகாமின் மூலம் பயன்பட்டனர்.



Post a Comment

0 Comments