நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர் எஸ்.வி சேகர். முன்னதாக இவரது வீட்டிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் அவரது வீட்டில் எந்த வித வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை, எனவே வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், தற்போது எஸ்.வி. சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் எஸ்.வி.சேகர் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஒரே வாரத்தில் இரண்டு முறை நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments