தென்காசி தெற்கு மாவட்டத்தில் இளம்பேச்சாளர்கள் உள்ளிட்ட 14 மாநில பேச்சாளர்களுக்கு தளபதி விருது மற்றும் பொற்கிளி யினை துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தென்காசி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான திமுக பாக முகவர்கள் கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் ஏற்பாட்டில் திமுக மாநில பேச்சாளர்கள் 14 பேருக்கு தங்க தளபதி விருது மற்றும் பொற்கிழியினை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வழங்கினார். இதில் 6 பேர் இளம்பேச்சாளர்கள் ஆவர்.
தமிழகத்திலேயே அதிகளவு இளம்பேச்சாளர்களை உருவாக்கியதுடன். அவர்களுக்கு மேடையை ஏற்படுத்தி தந்ததுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரிலான தங்க தளபதி விருது மற்றும் பொற்கிழியை வழங்கிட ஏற்பாடு செய்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலனுக்கு, திமுக துணை பொதுச்செயலாளரும், தென்மண்டல பொறுப்பாளருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. மற்றும் தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

0 Comments