கும்மிடிப்பூண்டி தொகுதி சானாபுத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சானாபுத்தூர் .சூரப்பூண்டி.ஏடுர் ஆகிய ஊராட்சிகளில்   உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சானாபுத்தூர் அரசு பள்ளி அருகில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி .ஜெ கோவிந்தராஜன்,  கலந்துகொண்டு பொதுமக்களிடம் மகளிர் உரிமைத் தொகை முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று நல உதவிகளை வழங்கினார்.

 இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த அரசுத்துறை அதிகாரிகளை  உரிய தீர்வு காண அறிவுறுத்தினார் இதில்  ஒன்றிய செயலாளர் மணிபாலன். வட்டார வளர்ச்சி அலுவலர் அமிழதமன்னன், மற்றும்   ஊராட்சி செயலாளர்கள் சசி. நவீன் ராமமூர்த்தி. உள்ளிட்ட  அரசு துரை அதிகாரிகள் கழக பொதுமக்கள்.உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments