தென்காசியில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிறிஸ்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


தென்காசியில் அமைந்துள்ள புனித மிக்கேல் அதிதூதரின் ஆலயத்திற்கும், அங்கு நடைபெறும் வழிபாட்டு நிகழ்வுகளுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆலயத்திற்கு எதிராக அமைந்திருக்கும் தினசரி சந்தையின் இரு நுழைவு வாயிலை அகற்றும்படியும், ஆர்.சி. பள்ளியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் விளையாட்டு மைதானத்தில் ரேசன் கடையை கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யக்கோரியும் கிறிஸ்வர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பண்டாரக்குளம் வட்டார அதிபர்  அந்தோணிசாமி அடிகளார் தலைமை வகித்தார். மரிய லூயிஸ் பாண்டியன் முன்னிலை வகித்தார். தென்காசி பங்கு தந்தை ஜேம்ஸ் அடிகளார் வரவேற்று பேசினார். கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தென் மண்டல அமைப்புச் செயலாளர் ரவி, பங்கு பேரவை சார்பில் ஜோதி காசி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சந்திரசேகர், ஆர் சி பள்ளி ஆசிரியர் அமலி செல்வராணி  ஆலங்குளம் பங்கு தந்தை சேகராஜ், கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வல்லம் பங்கு தந்தை விசுவாச ஆரோக்கியராஜ், தென்காசி வட்டார அதிபர் அந்தோணிசாமி, ஆர் சி சர்ச் குருக்கள்ஜேம்ஸ், அலாய்சியஸ் துரைராஜ்,ண புளியங்குடி பங்குத்தந்தை எட்வின், மறை மாவட்ட பொருளாளர் தீபக், மேல மெஞ்ஞானபுரம் பங்குத்தந்தை அல்போன்ஸ், சிதம்பராபுரம் பங்குத்தந்தை அந்தோணி ராஜ், வாடியூர் பங்குத்தந்தை லியோ ஜெரால்டு, சுரண்டை பங்குத்தந்தை ஜோசப் ராஜன், தென்காசி உதவி பங்கு தந்தை  ஜியோ சந்தனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் அகரக்கட்டு பங்குத்தந்தை அலோய்சியஸ் துரைராஜ் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments