தென்காசி அருகே பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவம்-சேவை முகாமினை பா.ஜ.க. மாவட்டத்தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி தொடங்கி வைத்தார்.
தென்காசி மாவட்ட பா.ஜ.க. சார்பில், இலவச மருத்துவம் மற்றும் சேவை முகாம் தென்காசி அருகேயுள்ள திருவேட்டநல்லூர் ஊராட்சி பகுதியில் நடைபெற்றது. இம்முகாமினை மாவட்டத் தலைவர் ஆனந்தன்அய்யாசாமி தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் பொது மருத்துவ முகாம் 307 பேர்,கண் மருத்துவ முகாம் 108 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டோர் 66 பேர் பிரதான்மந்திரி மருத்துவ காப்பீட்டு பதிவு 376 பேர் ஆகியோர் பயன்பெற்றனர். இதில் ரெட்கிராஸ் சொசைட்டி மருத்துவர்கள் குழு, மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் இராம்குமார், மாவட்ட செயலாளர் சண்முகராஜ் ஒன்றிய தலைவர் சிவா , மணிகண்டன் , முருகேசன், வேல்சாமி,மற்றும் மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் கிளைத் தலைவர்கள் ஊர் நாட்டாண்மை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


0 Comments