தேனி அருகே வட புதுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், கல்லூரி முதல்வர் மதளை சுந்தரம் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி செயலர் சோமசுந்தரம், கல்லூரியின் இணைச்செயலர் சுப்பிரமணி, கல்லூரியின் துணை முதல்வர் மாதவன், கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் விழா பேருரையாற்றினார்.
இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் மாணிக்கம் மற்றும் தேனி வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பது குறித்தும், வாகனங்கள் இயக்குவதன் நுணுக்கங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வும் நடைபெற்றது. மாணவியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்வின் நிறைவாக, கல்லூரியின் துணை முதல்வர் சத்யா நன்றியுரை ஆற்றினார்.





0 Comments