பாஜக விசாரணை குழு தலைவர் ஹேமமாலினியின் கார் கரூர் செல்லும் போது விபத்து.....



 கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவத்தை ஆராய, பாஜக சார்பில் எம்.பி. ஹேமமாலினி தலைமையில் 8 நபர்கள் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. குழுவினருடன் ஹேமமாலினி இன்று (செப்.30) கோவையில் இருந்து கரூருக்கு புறப்பட்டார்.

இந்நிலையில், சின்னியம்பாளையம் அருகே ஹேமமாலினி பயணித்த கார் விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் துயரச் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக ஹேமமாலினி மேற்கொண்ட பயணத்தில் இந்த விபத்து ஏற்பட்டது கவலையை ஏற்படுத்தியுள்ளதோடு, சம்பவம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments