மதுரை ஆதினம் நியமனத்தில் இந்து அறநிலையத்துறை தலையிட வேண்டும்..... கலெக்டரிடம் ஸ்ரீமத் விஷ்வலிங்கம் தம்பிரான் மனு...... - MAKKAL NERAM

Breaking

Tuesday, September 2, 2025

மதுரை ஆதினம் நியமனத்தில் இந்து அறநிலையத்துறை தலையிட வேண்டும்..... கலெக்டரிடம் ஸ்ரீமத் விஷ்வலிங்கம் தம்பிரான் மனு......

 



மதுரை ஆதின மடத்தில் தம்பிரான இருந்த ஸ்ரீமத் விஷ்வலிங்கம் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் மதுரை மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றை கொடுத்தார்.


அதில் ஸ்ரீமத் விஷ்வலிங்கம் தம்பிரான் என்பவர் 2018 ஜூலை மாதம் முதல் 292 வது ஆதினம் அருணகிரிநாதரின் கரங்களால் தீக்சை பெற்று தம்பிரான் சாமியாக சேவை செய்து வந்தேன். 2021 ம் வருடம் குரு மகா சன்னிதானம் அருணகிரிநாதர் மகா சித்தி அடைந்தார். அதன் பிறகு தற்போதுள்ள 293 வது ஆதீனத்திடம் தம்பிரான் சாமியாக தொடர்ந்து பணியாற்றினேன்.


முன்னாள் ஆதீனம் விருப்பப்படி தான் அடுத்த வாரிசாக வரவேண்டும். எனவே என்னை ஆதினமாக நியமிக்க வேண்டும் . இந்த பிரச்சினை குறித்து முதல்வரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் தலையிட வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் முன்னாள் ஆதீனம் அருணாகிரி நாதர் சமாதி முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் .


பின்னர் தம்பிரான் நிருபர்களிடம் கூறும் போது, மதுரை ஆதினம் குழந்தை போல பேசுவார். திடீர் திடிரென்று கோபப்படுவார். யார் பேசினாலும் சதி இருக்குமோ என கேள்வி கேட்பார். மதுரை ஆதினத்தின் மீது வழக்கு உள்ளதால் அவராக மதுரை ஆதினத்தில் இருந்து விலக வேண்டும்.மதுரை ஆதினம் நியமனத்தில் இந்து அறநிலையத்துறை தலையிட வேண்டும். முன்னாள் ஆதீனம் விருப்பப்படி தன்னை ஆதீனமாக நியமிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment