அதிமுக அதிருப்தி தலைவர்களை சந்திக்க கூடாது..... அமித்ஷாவுக்கே கட்டுப்பாடு விதித்த எடப்பாடி பழனிச்சாமி



அதிமுகவின் அதிருப்தி தலைவர்கள் யாரையும் அமித்ஷா இனி சந்திக்க மாட்டார் என்ற வாக்குறுதியை வெற்றிகரமாக பெற்றுள்ளதாகத் தகவல்.நேற்று இரவு  ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து 1மணி நேரம் பேசிய நிலையில், அதிமுகவின் அதிருப்தி தலைவர்கள் யாரையும் சந்திக்கக் கூடாது என கட்டுப்பாடு விதித்த நிலையில் அதற்கு அமித்ஷா தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா தான் அனைவருக்கும் நிபந்தனையும் கட்டுப்பாடும் விதிப்பார். ஆனால் அமித்ஷாவுக்கே கட்டுப்பாடு விதித்தது எடப்பாடி பழனிச்சாமியின் ராஜதந்திரம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செய்தியாளர் P.S.சுதா

Post a Comment

0 Comments