திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய கல்பாக்கம் ஊராட்சி வெள்ளம் பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் ஆசிரியர்கள் விஜயலட்சுமி,காஞ்சனா, உள்ளிட்டவர்கள் தலைமை வகித்தனர்.
இதில் சமூக ஆர்வலர் மீஞ்சூர் ஏ. எஸ்.பி.விஸ்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அவரின் ஏற்பாட்டில் கல்வி பயிலும் 16 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களான நோட்டு, பென்சில்,பேனா, ஜாமென்ட்ரி பாக்ஸ், வாட்டர் பாட்டில், ஸ்கூல்பேக் , உள்ளிட்ட பொருட்களை வழங்கினார், இதில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.


0 Comments