பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்..... திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ சிறுணியம் பலராமன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 117வது பிறந்தநாளை ஒட்டி பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார் ஏற்பாட்டில் பொன்னேரியில் உள்ள அண்ணா சிலைக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் அப்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னாள் தலைவர் சங்கர் யுவராஜ் அமுதலிங்கம் மாரி சத்தியமூர்த்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments