வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ சார்பில் பாடியநல்லூரில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலைய பணிகளை அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்


வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11 பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பாடியநல்லூரில் ரூபாய் 10.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 17735 சதுர அடி பரப்பளவில் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

 வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ சார்பில் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி வைத்து பேருந்து நிலைய கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். சிஎம்டிஏ உறுப்பினர்/ செயலாளர் பிரகாஷ், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப், மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம்,சோழவரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கட்டுமான பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள நாட்கள் குறித்து அமைச்சர் சேகர்பாபு சிஎம்டிஏ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

 பேருந்து நிலையத்தில் மாதிரி வரைபடங்களுடன் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து அப்போது அதிகாரிகள் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அப்போது அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Post a Comment

0 Comments