நயினார் நாகேந்திரனுக்கு செலெக்ட்டிவ் அமீனீசியா...... குற்றச்சாட்டுகளை அடுக்கும் டிடிவி தினகரன்......


 அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஏற்கனவே ஓபிஎஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிய நிலையில் டிடிவி தினகரனும் விலகுவதாக கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அவரது விலகலுக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தான் காரணம் என்ற ஒரு செய்தி பரவி வந்த நிலையில் தற்போது இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்து வருகிறார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளர் என அமித்ஷா எந்த ஒரு இடத்திலும் கூறவில்லை. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தேசிய ஜனநாயக கூட்டணியை சரியான முறையில் கையாளவில்லை. தமிழ்நாட்டின் மனநிலை அவருக்கு புரியவில்லை. நான் பிரதமர் மோடிக்காக தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தேன். எடப்பாடி பழனிச்சாமி அகங்காரத்தில் பேயோட்டம் ஆடுகிறார். பழனிச்சாமியை நயினார் நாகேந்திரன் தூக்கிப்பிடித்தது தான் அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியதற்கு காரணம்.

அதிமுக கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என அமித்ஷா கூறிய நிலையில் அதனை மறுக்கும் நயினார் நாகேந்திரனுக்கு செலெக்ட்டிவ் அமீனீசியா வா என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் எடப்பாடி பழனிச்சாமி பேயாட்டம் போடும் நிலையில் நயினார் நாகேந்திரன் அவரை தூக்கிப் பிடிக்கிறார் எனவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததே தாங்கள் கூட்டணியில் இருந்து விலக காரணம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நயினார் நாகேந்திரனுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியை சரியான முறையில் கையாளவில்லை எனவும் அண்ணாமலை அதனை முறையாக செய்தார் எனவும் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலக அவரே காரணம் என டிடிவி தினகரன் கூறியுள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.

ஏற்கனவே பிரதமர் மோடி தமிழகம் வந்த போது அவரை சந்திக்க அனுமதி கேட்டதாகவும் இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு மெசேஜ் அனுப்பியதாகவும் ஓபிஎஸ் அதனை செய்தியாளர்களிடம் காண்பித்த நிலையில் பின்னர் அவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து தற்போது டிடிவி தினகரனும் கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் அதற்கு நயினார் நாகேந்திரன் தான் காரணம் எனக் கூறியுள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.

Post a Comment

0 Comments