தென்காசி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி தலைமை வகித்தார். பாஜக கன்னி யாகுமரி பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கடையநல்லூர் நகர தலைவி மகேஸ்வரி முருகன் வரவேற்றார்.
கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது . மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாலகுருநாதன், அருள்செல்வன் மாவட்ட பொருளாளர் கோதை மாரியப்பன் மற்றும் மாநில நிர்வாகிகள் அன்புராஜ், மாவட்ட நிர்வாகிகள் மரகதா, தர்மர், இராஜலட்சுமி, முத்துக்குமார் , மந்திரமூர்த்தி , மண்டல் தலைவர்கள் மற்றும் முன்னாள் , இன்னாள் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து துணை ஜனாதிபதி தேர்தலில் சிபி.இராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையடுத்து பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.


0 Comments