• Breaking News

    தமிழர் வெற்றி..... துணை குடியரசுத் தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன்......

     


    டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (செப்.9) நடைபெற்ற துணை குடியரசுத் தலைவர் தேர்தலில், ‘என்டிஏ’ கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்ட தமிழர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெற்றுள்ளார்.

    மொத்தம் 782 மக்களவை மற்றும் எனினும்  எம்பிக்களில், 767 பேர் வாக்களித்துள்ளனர். 12 எம்பிக்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. வெற்றிக்கு தேவையான 386 வாக்குகளைக் கடந்தும், சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று எளிதில் வென்றார். எதிரணியான ‘இந்தியா’ கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி(300)  போட்டியிட்டபோதும், பெரும்பான்மையை ‘என்டிஏ’ சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    No comments