திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மேல்முதலம்பேடு தண்டலச்சேரி கெட்னமல்லி பாலவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கவரப்பேட்டைஉள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், கலந்துகொண்டு பொதுமக்களிடம் மகளிர் உரிமைத் தொகை முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று நல உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த அரசுத்துறை அதிகாரிகளை உரிய தீர்வு காண அறிவுறுத்தினார். இதில் ஒன்றிய செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் மாவட்ட கவுன்சிலர் ஜோதி. ஹரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிழதமன்னன், மற்றும் ஊராட்சி செயலாளர்கள் பாண்டியன் பொன்னுசாமி, குப்பையா,மணி உள்ளிட்ட அரசு துரை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


0 Comments