திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் நாலூர் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், நாலூர் வன்னியம்பாக்கம், சிறுவாக்கும் ,ஆகிய ஊராட்சி அடங்கிய உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நாலூர் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்துகொண்டு மக்களின் கோரிக்கை மனுக்களை குறித்து மனுக்களை பதிவு செய்யும் செயல்முறை நேரில் பார்வையிட்டு மனுதாரர்களுடன் நேரடியாக உரையாடி துறை சார்ந்த அதிகாரியுடன் இணைந்து அவர்களின் தேவைகளுக்குஉடனடி தீர்வுகள் காணுமாறு கேட்டுக் கொண்டார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, குணசேகரன், ஒன்றிய செயலாளர், ராஜா ஊராட்சி செயலாளர்கள் சோனியா . சரஸ்வதி. எஸ்தர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் காங்கிரஸ் திமுக. நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.



0 Comments