இந்திய துணை குடியரசு தலைவரை தேர்வு செய்யும் வாக்குப்பதிவு இன்று காலை சிறப்பு ஏற்பாடுகளுடன் தொடங்கியது. ‘இந்திய’ கூட்டணியின் சார்பில் சுதர்சன் ரெட்டி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அதேசமயம், ‘NDA’ கூட்டணியின் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த சிபி. ராதாகிருஷ்ணன் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் வாக்குப்பதிவில் முதல் ஆளாக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கை பதிவு செய்தார்.
இதையடுத்து, மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் உள்ளிட்ட மொத்தம் 782 எம்பிக்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு நிறைவடைந்த பின், இன்று மாலையிலேயே எண்ணிக்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்யும் இத்தேர்தல், எதிர்கட்சிகளுக்கும் ஆளும் கூட்டணிக்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாய் பார்க்கப்படுகிறது.


0 Comments