சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைத் திருவிழா நடைபெற்றது
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை கல்லூரிக் கலைத் திருவிழா கல்லூரி முதல்வர் முனைவர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. பேச்சுப்போட்டி தனிப்பாடல் போட்டி தனி நடனப் போட்டி குழு நடன போட்டி சொல்லிசை போட்டி வாழ்வின் இசைப்போட்டி என ஆறு போட்டிகள் நடைபெற்றன. 92 மாணவ , மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
ஒவ்வொரு போட்டியிலும் மூன்று பேர் வீதம் 18 பேர் போட்டிகளில் வெற்றி பெற்றார்கள். கல்வி சிறந்த பல்துறை அறிஞர் பெருமக்கள் ஏழு பேர் நடுவர்களாக கலந்து கொண்டார்கள். கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்களும், வேதியல் துறை பேராசிரியர்களும், மாணவர்கள், மாணவிகளுக்கு கலைப் பயிற்சிகளைக் கொடுத்து அவர்களைத் தயார்படுத்தி இருந்தார்கள். கலைக்குழுவின் தலைமை பொறுப்பாளர்களாக முனைவர் பொங்கியண்ணன்,முனைவர் வெங்கடேஷ், முனைவர் பாரதி, முனைவர் ராஜேஸ்வரி ஆகியோர் செயல்பட்டனர்.நிகழ்ச்சியை,தமிழ் துறைப் பேராசிரியர் முனைவர் எண்ணம் மங்களம் பழநிசாமி ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 , 6382211592 .
No comments