ஐகோர்ட் நீதிபதியை நேரில் சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்

 


தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட பெண்கள் குழந்தைகள் என 39 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளது. 

இந்த குழு இன்று கரூருக்கு புறப்பட்டு விசாரணையை தொடங்க இருக்கிறது.இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் நீதிபதியை சந்தித்து கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக முறையிட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வீட்டிற்கு காலை 11.30 மணிக்கு விஜய் நேரில் சென்று சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்த இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. 

முதல்வர் ஸ்டாலின் அமைத்த விசாரணை குழு மீது நடிகர் விஜய்க்கு நம்பிக்கை இல்லாததால் அவர் இவ்வாறு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பாதுகாக்க வேண்டும் எனவும் நடிகர் விஜய் முறையிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments