பெரியகுளம் கீழவட நூலக கட்டிடம் திறப்பு விழா..... தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.....


தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடகரை பகுதியில் பள்ளி கல்வி பொது நூலகங்கள் 2023-2024  திட்டத்தின் கீழ் ரூபாய் 22 லட்சம்  மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நூலக கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நூலகத்தில் நூலகர் ராஜகோபால் மற்றும், கீழவடகரை வாசகர் வட்ட தலைவர் மோகன், நகர்நல சங்க செயலாளர் மற்றும் தென்கரை நூலக வாசகர் வட்ட தலைவர் அன்புக்கரசன், பெரியகுளம் வளர்ச்சிப் பேரவை தலைவர் மற்றும் வடகரை நூலக வாசகர் வட்ட தலைவர் வழக்கறிஞர் மணி கார்த்திக், பெரியகுளம் மக்கள் மன்ற தலைவர் மருத்துவர் இளங்கோவன், முத்துவேல் பாண்டியராஜன் (எ) கண்ணன், மணிபூசாரி,நல்நூலகர்கள் சவட முத்து, குமரன், சண்முகம் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். 

 இந்நிகழ்வில்  புரவலர்கள் ஜெயராமன் நாயுடு, பொறியாளர்கள் இராஜாமணி,   சந்திரமோகன் வாசகர் வட்ட பொருளாளர் ஜெயராஜ்,  இன்சூரன்ஸ் பால்ராஜ்,  ஆசிரியர் ராம்ஜி பாடலாசிரியர்  எழுத்தாளர்  நீலபாண்டியன், கவிஞர்கள்  ராமு, நாகநந்தினி, மன்னர்மன்னன், பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த இப்ராஹிம் பாட்சா, கருப்பணன் தினக்கூலி நூலகர் பாண்டிய செல்வி மற்றும் சமூக ஆர்வலர்கள், நூலக ஆர்வலர்கள், புரவலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



Post a Comment

0 Comments