தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் என கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் கரூர் தமிழக வெற்றி கழகம் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்மல் குமார் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மதியழகன் தலைமறைவாக இருக்கின்றார்.
இவரை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் தற்போது தமிழக வெற்றி கழக தலைவர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்ய கிளம்பி விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கரூர் ஏடிஎஸ்பி பிரேமானந்தன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவுக்குள் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது போலீசார் மதுரை மற்றும் புதுச்சேரி விரைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

0 Comments