பெரியகுளத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி பயிற்சி முகாம் நடைபெற்றது


தேனி மாவட்டம் பெரியகுளம்  வடகரை ராமானுஜம் மண்டபம் மற்றும் தென்கரை மாங்கனி மஹாலில் பெரியகுளம் அதிமுக நகர செயலாளர் பழனியப்பன் தலைமையில் பூத் கமிட்டி பயிற்சி முகாம் நடைபெற்றது.பெரியகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ்,மாவட்ட கழக இணைச்செயலாளர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முறுக்கோடை எம்.பி ராமர்,மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப துணைச்செயலாளர் வெற்றிவேல் ராஜன்,மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தியாகு,மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணைச்செயலாளர் பிரசன்னகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசும்போது " திமுக ஆட்சியில் நடைபெறும் அவலங்களை பொதுமக்களிடத்தில் ஒவ்வொரு அதிமுக நிர்வாகிகள் மற்றும்  உறுப்பினர்கள் பொதுமக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலில் களப்பணி ஆற்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக வெற்றி பெற செய்ய வேண்டும்.

அதேபோல் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் தலைமைக் கழகம் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் சுறுசுறுப்புடனும், விழிப்புணர்வுடனு தேர்தல் பணியாற்ற வேண்டும்" என்று பேசினர்.இந்த பூத் கமிட்டி பயிற்சியின் போது பங்கேற்ற பெண்களை அழைத்து திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை ஒரு படிவத்தில் மதிப்பெண்ணாக பெற்றனர்.இதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்களிடம் திமுக அரசின் அலட்சிய போக்கை மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

வடகரையில் உள்ள அரண்மனை தெருவில் திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்களை துண்டு பிரசுரமாக வீதி வீதியாக வழங்கினர்.இந்நிகழ்வில்  மாநில பொதுக்குழு உறுப்பினர் தவமணி கருப்பசாமி,மாநில மருத்துவ அணி இணைச்செயலாளர் அனுமந்தன்,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தவமணி,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் துரைப்பாண்டி, மாவட்ட பிரதிநிதிகள் சுரேஷ்,விஜய் ஆனந்த்,ஒன்றிய துணைச் செயலாளர் செல்லப்பாண்டியன்,நகர துணை செயலாளர் வெங்கடேசன்,நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் கணேசன்,நகர அம்மா பேரவை செயலாளர் ஜெயசீலன் உள்பட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments