முதல்முறையாக பாமக கூட்டத்தில் பேசிய ராமதாசின் மகள்

 


கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் ஓசூரில் நேற்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட டாக்டர் ராமதாசின் மகள் ஸ்ரீகாந்தி பரசுராமன் முதன்முதலாக நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

டாக்டர் ராமதாஸ், அரசியல் அனுபவத்திலும் துணிவான தியாகத்திற்கும், ஓய்வறியாத உழைப்பிற்கும் எடுத்துக்காட்டாக அன்றும், இன்றும் இருந்து வருகிறார். அவருக்கு ஈடாக, இணையாக இதுவரை யாரையும் பார்த்ததில்லை, இனி பார்க்கப்போவதும் இல்லை. முதிர்ந்த வயதிலும், உள்ளத்தில் உறுதி குறையாமலும், அரசியல் களத்தில் துடிப்போடு இருக்கும் அவருக்கு துணையாக நிற்பது அவரது மகளாகிய எனது கடமை ஆகும். மகளாக இருப்பது மட்டுமின்றி ஒரு படி மேலாக தொண்டராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறேன்.

டாக்டர் ராமதாசின் அனைத்து முயற்சிக்கும் அவருடன் துணை நின்று லட்சோப லட்சம் தொண்டர்களுடன் இருக்க விரும்புகிறேன். அவரது தலைமையிலும், வழிகாட்டுதலின்படியும் பா.ம.க. பேராற்றலுடன், வலிமையுடன் போராடும் சக்தியாக மாறியுள்ளது. டாக்டர் ராமதாசின் ஒற்றை தலைமையை ஏற்று அவரின் அனுபவ வழிகாட்டுதலுடன், ஒற்றுமையுடன் தொடர்ந்து போராடி வெற்றி பெறுவோம். இந்த நம்பிக்கையை உங்களிடம் விதைக்கத்தான் ஒரு தொண்டராக உங்கள் முன்பு நிற்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.

Post a Comment

0 Comments