கீழப்பாவூர் நரசிம்மர் பீடத்தில் ஸ்ரீமகா சூலினி துர்க்கா ஹோமம் நடைபெற்றது


பாவூர்சத்திரம்-சுரண்டை சாலையில் கீழப்பாவூர் வடக்கு பேருந்து நிலையம் அருகில் அமைந்துள் ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரசிம்மர் பீடத்தில் தென்தமிழகத்தில் ஸ்ரீமஹா சூலினி துர்க்கா விக்ரஹ ரூபமாக ஆராதனை நடைபெற்றது. இங்கு அமாவாசையையொட்டி ஸ்ரீமகா சூலினி துர்க்கா ஹோமம் நேற்று (ஞாயிறு) நடைபெற்றது. நவக்கிரஹ தோசங்கள், செய்வினை, ஏவல், பில்லி, சூனியம்,வசியம், திருஷ்டி போன்ற மாந்திரீக கோளாறுகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் எதிரி தொல்லைகளில் இருந்து விடுபடவும் நடைபெற்ற இக்ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை  ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரசிம்மர் பீடத்தினர் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments