தென்காசி நகராட்சிக்குட்பட்;ட தினசரி சந்தை நுழைவு வாயில் பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் நகராட்சி தலைவர் சாதிர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோரிடம், தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம், தென்காசி நகராட்சிக்குட்பட்ட தினசரி சந்தை தற்போது புதியதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இச்சந்தையின் மேல்புறம் நுழைவாயில் எதிரில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வரும் பக்த கோடிகள் சந்தையின் நுழைவாயில் எதிரில் உள்ளதால் தங்களின் ஆலய தரிசனத்திற்கு இடையூறாக இருக்கும் என்று என்னிடம் நேரில் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே இதுகுறித்து பரிசீலனை செய்து தகுந்த நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


0 Comments