விரைவில் இ ஆதார் மொபைல் செயலி..... வீட்டில் இருந்தே அப்டேட் செய்யலாம்
ஆதார் என்பது மத்திய அரசின் சார்பில், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI)வழங்கப்படும் 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் ஆகும். நாட்டில் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக ஆதார் உள்ளது. வங்கி கணக்கு துவங்குது முதல் செல்போன் எண் வாங்குவதற்கு ஆதார் எண்ணே பிரதானமாக கேட்கப்படுகிறது.
ஆதார் விவரங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதை ஆதார் சேவை மையம் அல்லது இ சேவை மையம் மூலமாகவும் ஆன்லைன் வழியாகவும் மேற்கொள்ள முடிகிறது. இந்த வசதியை மேலும் எளிமைப்படுத்தும் விதமாக இனி செயலியை அறிமுகம் செய்ய தனித்துவ அடையாள ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதாவது, E Adhar என்ற மொபைல் செயலி விரைவில் அறிமுகம் ஆக உள்ளது. இதன் மூலம் ஆதார் விவரங்களை செல்போன் செயலி மூலமாகவே அப்டேட் செய்து கொள்ள முடியும். இ சேவை மையங்களுக்கு நேராக செல்லாமல் பெயர், முகவரி பிறந்த தேதி உள்ளிட்டவற்றை மாற்றும் வகையில் இந்த சேவை இருக்கும் என்ரு எதிர்பார்க்கப்படுகிறது
No comments