கீழையூர் அருகே நெற்பயிர்களில் புகையான் தாக்குதல்..... வேளாண் துறையினர் ஆய்வு


நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் வட்டாரத்திற்கு பல்வேறு கிராமங்களில்   நெற்பயிர்களில் புகையான் தாக்குதல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிக்கல் வேளாண் அறிவியல் நிலையம் விக்கானி மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின்போது இந்த தாக்குதல் தென்பட்டது.

தற்போது நிலவி வரும் அதிக ஈரப்பதம் மற்றும் வெப்பமான காலநிலை காரணமாகவே இந்த பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் சிறப்பாக கவனிக்க வேண்டியது அவசியம் எனவும் வேளாண்துறையினர் விவசாயிகளிடம் வலியுறுத்தியுள்ளனர். நெல் வயல்களில் பட்டம் பறவைகளை விடுதல், வயலுக்குள் தண்ணீரை சரியாக அடிக்கட்டு செய்தல், தேவைக்கு அதிகமாக யூரியா உரத்தை பயன்படுத்தாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகள் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்த உதவும் எனவும். மேலும் வேப்பெண்ணெய் சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்தை தேவையான அளவில் தெளித்தல் தாக்குதலை தடுக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அவசியம் ஏற்பட்டால் இமிடாகுளோபிரிட், டினோடிஃபியுரான் அல்லது பிப்ரோனில் போன்ற மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்தலாம் எனவும், இவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொண்டால் நெற்பயிர்களில் புகையான் தாக்குதலை திறம்படக் கட்டுப்படுத்த முடியும் எனவும் வேளாண்மை உதவி இயக்குனர் வை பாலசுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.

திருக்குவளை நிருபர் த.கண்ணன் 


Post a Comment

0 Comments