சின்னமங்கோடு ஸ்ரீ உடையவர் கோட்டை வெங்கட கிருஷ்ண ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் சின்னமங்கோடு குப்பத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ உடையவர் கோட்டை வெங்கடகிருஷ்ணன் ஆலயம் பக்தர்கள் நிதி உதவியோடு அண்மையில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று வந்தன அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 22ஆம் தேதி பந்தக்கால் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து கணபதி ஓமம் உடன் தொடங்கி கோ பூஜை, முதல் காலையாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜை ,மூலவர் பெருமாள் திருமஞ்சனம் உள்ளிட்டவை நடைபெற்று வந்ததன அதனை தொடர்ந்து இறுதி நாளான இன்று மகா பூர்ணத்தி நடைபெற்று பின்னர் பல்வேறு புண்ணிய நதிகள் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை பட்டாசிரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தின் மீது ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர் அப்போது கூடி இருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்னும் முழக்கமிட்டு எம்பெருமானை வழிபட்டனர் இதில் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னால் எம் எல் ஏ வுமான சிறுணியம் பலராமன், முன்னால் எம் எல் ஏ பொன்.ராஜா, ஒன்றிய செயலாளர் முத்துகுமார் நகர செயலாளர் செல்வகுமார், விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன்,மினவரனி மாவட்ட செயலாளர் மோகன்,மாவட்ட து.செயலாளர், ஸ்ரீதர் பொன்னேரி காங்கிரஸ் எம் எல் ஏ துரை சந்திரசேகர் வடக்கு ஒன்றிய திமுக ஒன்றிய பொறுப்பாளர் முரளி ,மங்கோடு தேவன்,ரமேஷ் முன்னால் கவுன்சிலர் அன்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாட்டை சின்ன மங்கோடு குப்பத்தினர் ஊர் செட்டிமார்கள் செய்திருந்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments