சீதாராம் யெச்சூரியின் முதலாமாண்டு நினைவு தின கருத்தரங்கம் நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நாகப்பட்டினம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) சார்பில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.லதா தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிந்தன், இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் சி.மிருதுளா ஆகியோர் கருத்துரையாற்றினர். அரசியல் தலலமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.சுபாஷ் சந்திரபோஸ் நன்றியுரையாற்றினார்.



0 Comments