நாகப்பட்டினம் மாவட்டம் புதிய கடற்கரை பகுதியில் தினசரி காலை மாலை வேலைகளில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்ட வருகின்றனர். அது மட்டும் இன்றி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை நேரத்தில் கலை நிகழ்ச்சிகள் பட்டிமன்றங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களும் அங்கு உள்ளது கடற்கரை பகுதி என்பதால் நாள்தோறும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் அங்கு உள்ள பொது கழிவறை முறையாக பராமரிக்கப்படாததால் துர்நாற்றத்துடன் காணப்படுகிறது இதனால் பொதுமக்கள் பொதுவெளியில் கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் பொது கழிப்பறையை தூய்மைப்படுத்தி தினசரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் மேலும் கூடுதல் கழிவறைகளை அமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



0 Comments