தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று முன்தினம் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த துயரத்தில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக மாநில அரசு விசாரணை குழு அமைத்துள்ள நிலையில் அந்த குழு தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை வேண்டி மனுதாக்கல் செய்துள்ள நிலையில் அந்த மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.
இந்த சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி வரும் நிலையில் உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜேபி நட்டா கரூர் துயரம் குறித்து விசாரிக்க தற்போது உண்மை கண்டறியும் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார்.எம்பி ஹேமமாலினி தலைமையில் சுமார் 8 பேர் இந்த குழுவில் இருக்கின்றனர்.
அதன்படி மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், சிவசேனா எம்பி ஸ்ரீ காந்த் ஷிண்டே, எம்பி, தேஜஸ்வி சூர்யா, எம்பி ரேகா ஷர்மா, தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி புட்டா மகேஷ் குமார் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். மேலும் இந்த குழு சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறது.

0 Comments