திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது


வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வகையான போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது வருவாய் அலுவலர்களை வாட்டி வதைக்கும் திட்டமான "உங்களுடன் ஸ்டாலின்" தொடர்பான அனைத்து பணிகளையும் இன்று 25.09.2025 காலை 9 மணி முதலாகவே புறக்கணிப்பு செய்ய வேண்டும்.மறு அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து இப்பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என வலியுறுத்தும் வகையில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் வட்ட ஒருங்கிணைப்பாளர் ,தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் வட்ட ஒருங்கிணைப்பாளர் ,தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் வட்ட ஒருங்கிணைப்பாளர் ,தமிழ்நாடு நில அலுவலர் ஒருங்கிணைப்பு சங்கத்தின் வட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி.,தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபு., பாக்யசர்மா., பழனி மணிகண்டன், சண்முகம்., யோகநாத் ,ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments