பாஜக கூட்டங்களை தொடர் புறக்கணிப்பு..... அண்ணாமலை விளக்கம்

 


தமிழக முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடல்நலக்குறைவால் மருத்துவ சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இன்று நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவின. இதனைத் தொடர்ந்து, தனது உடல்நிலை குறித்தும், கூட்டத்தில் ஏன் கலந்துக்கொள்ள முடியவில்லை என்பதையும் அண்ணாமலை நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்.

இன்று நடைபெறும் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள், புதிய நிர்வாகிகள் நியமனம், கட்சியில் நிலவும் கருத்து வேறுபாடுகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இத்தகைய முக்கியமான கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது உடல்நிலை காரணமாக இவ்வாறு ஏற்பட்டது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments