பெரியகுளத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பூமி பூஜை..... எம்எல்ஏ பங்கேற்பு

 


 தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நிகழ்ச்சி பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், பெரியகுளம் நகர மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், திமுக பெரியகுளம் நகர் கழக செயலாளர் முகமது இலியாஸ், பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் தமிகா சுல்தானா, மற்றும் வார்டு கவுன்சிலர்கள், மற்றும் நகராட்சி பணியாளர்கள், சுகாதார நிலைய மருத்துவர்கள் செவிலியர்கள், திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






Post a Comment

0 Comments