குற்றாலத்தில் நடைபெற்ற தமிழக வணிகர் சம்மேளன நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென்காசி மாவட்டம், குற்றாலம், தமிழக வணிகர் சம்மேளன நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது. மேளன மாநில தலைவர் தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு தலைவர் மாரியப்பன், பொதுச் செயலாளர் நாகராஜன், மாநில மகளிர் அணி செயலாளர் பானுமதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஜீவானந்தம் வரவேற்றார்.
கூட்டத்தில் அமைப்பு புதிய கொடி மற்றும் வெப்சைட் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை, நியமனச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாநில துணைத் தலைவர்கள் அப்துல் கனிராஜா, முகமது ஷாஜகான், வழக்கறிஞர் செல்லத்துரை பாண்டியன்,மாநில துணை செயலாளர்கள் பன்னீர்செல்வம், ரங்கநாதன், மாநில அமைப்பு செயலாளர் கௌரி சங்கர், மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர்கள் உமா மாரிமுத்து, பட்டுமகேஷ், உமா மகேஸ்வரி, திருச்சி மண்டல செயலாளர் நடராஜன், மாவட்ட தலைவர் முத்தையா தமிழ் மருத்துவ அணி மதுரை மண்டல செயலாளர் கணேசன் மாவட்ட செயலாளர்கள் தினகரன், பால சுப்பிரமணியன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஜிஎஸ்டி குறைப்பிற்கு மத்திய அரசிற்கு நன்றி தெரிவிப்பது, 24 மணி நேரம் கடை திறக்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி,மாநகராட்சிகளில் உள்ள கடைகள் மற்றும் அரசு சொத்துக்களை ஏலம் விடுவதில் கமிட்டியில் வணிகர்களை இணைத்தமைக்கு தமிழக அரசிற்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முடிவில் தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் அமானுல்லர் நன்றி கூறினார்.


0 Comments