ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கும் தவெக தலைவர் விஜய்


 தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். இதற்காக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீரங்கம் தொகுதியிலேயே தனது முதல் பிரச்சாரத்தை ஆரம்பிக்க முடிவு செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதன் மூலம், தனது அரசியல் பயணத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைக்க விஜய் முயற்சி எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனை முன்னிட்டு, இன்று (செப். 6) திருச்சியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் வருகை தரவுள்ளார். இந்த ஆலோசனையில், பிரச்சார நிகழ்ச்சியின் முதல் கட்ட திட்டங்கள், கூட்டமைப்பு, பொதுமக்கள் பங்கேற்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் தனது பிரச்சாரத்தை ஜெயலலிதா வெற்றியடைந்த தொகுதியில் தொடங்குவதாகும் செய்தி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Post a Comment

0 Comments