தேனி: பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது


 தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். சரவணகுமார், துவக்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். 

இந்த நிகழ்வில், பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல். எம். பாண்டியன், பெரியகுளம் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் தங்கவேலு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்சுல் குதா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவன், உதவி பொறியாளர் மகேந்திரன், மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், பொம்மி நாயக்கன்பட்டி ஊராட்சி செயலர் சாகுல் ஹமீது, மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு, பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை துறை சார்ந்த அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். 

பெரியகுளம் செய்தியாளர்: மு. அழகர்.

Post a Comment

0 Comments