கும்மிடிப்பூண்டி பஜாரில் தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி. தயாளன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் சி. மாயாண்டி சிறப்புரையாற்றினார்.தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னிக்கல் சங்கத்தின் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து மாநில தலைவர் மாயாண்டி மழைக்காலங்களில் எலக்ட்ரீசியன் டெக்னீசியன் உள்ளிட்டர் உயிரைக் கொடுத்து வேலை பார்க்கின்றனர் அதற்காக தமிழக அரசு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கிடவும், அமைப்பு சாரா மின் பணியாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்திடவும், எச். மின் உரிமம் தகுதி தேர்விற்கான அனுபவச் சான்றிதழ் 5 ஆண்டை 3ஆண்டாக குறைத்து விட வேண்டுமென தமிழக அரசுக்கு கண்டனம் வழக்கங்கள் இயக்கி கோரிக்கை வைத்தனர் இதில் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் மற்றும் டெக்னிக் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


0 Comments